June 25, 2011

சாருவின் வெறிபிடித்த ரசிகர்கள்



சாருவின் பெயர் பொதுவெளியில் இப்படி அடிபடுவது இது முதல் முறையல்ல. நிச்சயம் கடைசிமுறையாகவும் இருக்கப்போவதில்லை. நித்யானந்தா விவகாரம் முடிந்து, ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாருவின் திருவிளையாடல் தொடங்கிவிட்டது. கடந்த ஒரு வாரமாக ட்விட்டர், ஃபேஸ்புக், பிளாக், யூட்யூப், கூகிள் பஸ் என்று எங்கும், எதிலும் சாரு. பக்கம் பக்கமாக விவாதங்கள், வாதங்கள், சப்பைக்கட்டுகள், குற்றச்சாட்டுகள், வியாக்கியானங்கள். முழுப் பின்னணியையும் அறிந்துகொள்ள தமிழச்சியின் இந்தப் பதிவையும், வினவு நேற்று வெளியிட்டுள்ள ஆழமான சம்மிங் அப் கட்டுரையையும் வாசிக்கலாம்.

ஒவ்வொரு முறை சாரு அம்பலப்படுத்தப்படும்போதும் அவருடைய ஃபேன் கிளப் எண்ணிக்கை கணிசமாகக் கூடுவது வாடிக்கை. அதே போல், ஒவ்வொரு முறையும் அவர் பிம்பத்தைத் தூசு தட்டி தூக்கி நிறுத்த அவர் வாசகர்கள் பிரயத்தனப்படுவதும் வாடிக்கையே. இந்த முறையும் அதுதான் நடந்திருக்கிறது. சாரு ஒரு பெண்ணுடன் ஆபாச சாட் செய்தார் என்பதை ஆதாரத்துடன் தமிழச்சி வெளிக்கொண்டு வந்தபோது,  உடனடியாக தமிழச்சி மீதுதான் பாய்ந்தார்கள். சாருவைக் குறை சொல்லும் உன் யோக்கியதை என்ன? இந்த சாட் அவருடையதுதான் என்பதற்கு என்ன ஆதாரம்? இதை ஏன் நீ வேண்டுமென்றே செய்திருக்கக்கூடாது?

பிறகு, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மீது. சாரு பற்றி தெரிந்தும் யார் உன்னை அவரிடம் உரையாடச் சொன்னது? சாரு அசிங்கமாகப் பேச ஆரம்பித்தபோதே ஏன் துண்டித்துக்கொள்ளவில்லை? நீ இடம் கொடுக்காமலா அவர் இப்படிப் பேசுவார்? உன் பின்னணி என்ன?  நீ ஏன் தமிழச்சியிடம் அடைக்கலம் புகுந்தாய்? சாரு செய்ததது தவறு என்றால் அவரை மாட்ட வைக்க நீங்களிருவரும் சேர்ந்து வலை பின்னியது தவறாகாதா?

தமிழச்சி மீதும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மீதும் அறச்சீற்றத்தை பாயிண்ட் பை பாயிண்ட் வெளிப்படுத்திய அத்தனைபேருக்கும் சாருவின் நிஜ முகம் தெரியும் என்பதுதான் வேடிக்கையான, வேதனையான உண்மை. சாரு ஒரு பெண் பித்தன் என்பது அவர்களுக்குத் தெரியும். மலிவான எழுத்து வியாபாரி என்பது தெரியும். அடிப்படை நேர்மையற்ற மனிதர் என்பதும் பச்சோந்தி போல் நிறம் மாறுபவர் என்பதும் தெரியும். தெரிந்தும் அவரை அவர்களால் ரசிக்க முடிகிறது. ஏன்? சாரு தன்னை ஒரு மகாத்மாவாக என்றுமே முன்னிறுத்தியதில்லையாம். அவர் காரக்டரே அப்படித்தானாம். தன் இச்சைகளை, அசிங்கங்களை அவர் என்றுமே மறைத்துக்கொண்டதில்லையாம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதில்லையாம். அநாகரிகமான, அசிங்கமான, வக்கிரமான எண்ணங்களையும்கூட துணிச்சலாக அப்படியே வெளிப்படுத்திவிடுவாராம்.

அதாவது, சாருவின் தனித்துவமான இயல்பு இது. அவரால் இப்படித்தான் இருக்கமுடியும்.  சாருவின் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொண்டது போல் மற்றவர்களும் அவரை ஏற்றுக்கொண்டுவிட்டால் பிரச்னையில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சாருவை அவர் குறைகளுடன் எற்றுக்கொள்ளவில்லை. சாருவை அம்பலப்படுத்த முயற்சி செய்த தமிழச்சியின் தவறும் அதுவே.

இதே காரணத்துக்காக இப்போது வினவு மீதும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அவர்கள் எப்போதும் எதையாவது எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். வினவு ஒருவரைத் திட்டுவது பெரிய விஷயமில்லை. அவர்கள் இதுவரை யாராவது ஒரு வார்த்தை பாராட்டியிருக்கிறார்களா? எதையாவது உருப்படியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்களா? சாருவை ஆபாச எழுத்தாளன் என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இவர்களுடைய பதிவுகளில் எத்தனை ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதைப் பட்டியலிடவா?

வேறு சில நண்பர்கள் புதியதொரு குற்றச்சாட்டையும் வினவு மீது இன்று சுமத்தினார்கள். அதாவது, தமிழச்சியுடன் கூட்டுச் சேர்ந்து, அந்தப் பெண்ணையும் பயன்படுத்திக்கொண்டு, சாதுரியமாக சாருவிடம் பேசி அவர் பாஸ்வர்டை வாங்கியிருக்கிறது வினவு. பிறகு இவர்களே சாரு பேசுவது போல் பேசியிருக்கிறார்கள். அதையே ஆதாரமாகவும் காட்டியிருக்கிறார்கள். ஓரளவுக்கு சாரு அந்தப் பெண்ணிடம் வழிந்திருக்கிறார் என்பது மட்டுமே உண்மை. பாஸ்வர்ட் கைமாறியபிறகு சாட்டின் தொனி மாறியதற்குக் காரணம் வினவு அண்ட் கோ.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் சரி, தமிழச்சி மீதும் சம்பந்தப்பட்ட பெண் மீதும் சாரு ரசிகர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கும் சரி, ஆதாரம் கிடையாது. ஆனால் அதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அவர்களுடைய தர்க்கம் எளிமையானது. சாருவை எதிர்க்கிறாயா? எனில் நீ என் எதிரி.

இங்கே கவனிக்கவேண்டியது இந்த அபாயகரமான ரசிக மனநிலையைத்தான். ஒரு நூலாசிரியரின் வாசகன் என்னும் நிலையில் இருந்து, அவரை வழிபடும் ரசிகனாக மாறி, பிறகு அவரை எதிர்ப்பவர்கள் மீது சீறி சினங்கொள்ளும் வெறியனாக மாறும்போது அபாயம் உச்சக்கட்டத்தை அடைகிறது.  இப்போது சாருவை உயர்த்திப் பிடிக்கும் பலரும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.

இவர்கள் ஏன் சாரு போன்ற ஓர் ஆபாச எழுத்தாளளைத் தாங்கிப்பிடிக்கவேண்டும்? சாருவின் உளறல்களையும் வக்கிர எழுத்துகளையும் உலக இலக்கியம் என்று ஏன் சிலாகிக்கவேண்டும்? காரணம் அவர்களுக்கு சாரு என்னும் பிம்பம் பிடித்திருக்கிறது. சாரு 'துணிச்சலாக' எழுதும் ஆபாசங்களும் வக்கிரங்களும் பிடித்திருக்கிறது. சாருவின் 'துணிச்சலான' சாட்டிங் பிடித்திருக்கிறது. போகப்பொருளாக மட்டுமே ஒரு பெண்ணைப் பார்க்கும் சாருவின் பார்வை பிடித்திருக்கிறது. சாரு என்னும் தனிப்பட்ட நபரைத் தாண்டி சாரு என்னும் பிம்பத்துக்கும் அது தரும் அத்தனை கிளர்ச்சிகளுக்கும் வசீகரத்துக்கும் இவர்கள் அடிமைப்பட்டுக்கிடக்கிறார்கள். எனவே, சாருவின் பிம்பத்தைச் சாருவைவிடவும் இவர்கள் கவனமாகப் பாதுகாக்கிறார்கள். இந்த வெறிப்பிடித்த ரசிக மனோபாவம் மேலும் பல சாருக்களை உருவாக்க வல்லது.

நடிகர்களும் அரசியல்வாதிகளும் சாமியார்களும் தங்களுக்கான ரசிகர் கூட்டத்தைக் கட்டமைக்க தங்கள் நேரத்தின் பெரும்பகுதியைச் செலவிடுகிறார்கள். பெரும் தொகையையும்.  ரசிகர்கள் இல்லாமல் அவர்களால் இயங்கமுடியாது. ஹிட்லர் பிரசார இயந்திரத்தைப் பயன்படுத்தியே தனக்கான ஒரு வெறிபிடித்த ரசிகர் கூட்டத்தைக் கட்டமைத்தார். இன்றளவும் அவர் மரியாதையுடன் வணங்கப்படுகிறார். சாரு அதிகம் மெனக்கெடவில்லை. பணமும் கொடுத்து, அவர் எழுத்தையும் படித்து, அவருடைய அத்தனை வக்கிரங்களையும் புன்னகையுடன் ஏற்று, அவரைக் கொண்டாடவும் தயாராக இருக்கிறார்கள் ரசிகர்கள். ஹிட்லரால்கூட சாதிக்கமுடியாததை சாரு சாதித்துக்காட்டியுள்ளார். இதற்காக அவர் தாராளமாகப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

முந்தைய கட்டுரைகள் :

1. சாரு நிவேதிதாவுக்கு மறுப்பு
2. சாரு நிவேதிதாவும் மோர்க்குழம்பும்

38 comments:

யுவகிருஷ்ணா said...

//இதே காரணத்துக்காக இப்போது வினவு மீதும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அவர்கள் எப்போதும் எதையாவது எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். வினவு ஒருவரைத் திட்டுவது பெரிய விஷயமில்லை. அவர்கள் இதுவரை யாராவது ஒரு வார்த்தை பாராட்டியிருக்கிறார்களா? எதையாவது உருப்படியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்களா? சாருவை ஆபாச எழுத்தாளன் என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இவர்களுடைய பதிவுகளில் எத்தனை ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதைப் பட்டியலிடவா?

வேறு சில நண்பர்கள் புதியதொரு குற்றச்சாட்டையும் வினவு மீது இன்று சுமத்தினார்கள். அதாவது, தமிழச்சியுடன் கூட்டுச் சேர்ந்து, அந்தப் பெண்ணையும் பயன்படுத்திக்கொண்டு, சாதுரியமாக சாருவிடம் பேசி அவர் பாஸ்வர்டை வாங்கியிருக்கிறது வினவு. பிறகு இவர்களே சாரு பேசுவது போல் பேசியிருக்கிறார்கள். அதையே ஆதாரமாகவும் காட்டியிருக்கிறார்கள். ஓரளவுக்கு சாரு அந்தப் பெண்ணிடம் வழிந்திருக்கிறார் என்பது மட்டுமே உண்மை. பாஸ்வர்ட் கைமாறியபிறகு சாட்டின் தொனி மாறியதற்குக் காரணம் வினவு அண்ட் கோ.//

இப்படியெல்லாம் யார், எங்கே சொல்லியிருக்கிறார்கள் என்று ஏதேனும் லிங்க் கொடுக்க முடியுமா?

மருதன் said...

யுவகிருஷ்ணா, லிங்க் எதுவும் என்னிடம் இல்லை. நண்பர் ஒருவர் நேரில் சொன்னது.

யுவகிருஷ்ணா said...

அதானே பார்த்தேன்? :-)

THOPPITHOPPI said...

//இப்படியெல்லாம் யார், எங்கே சொல்லியிருக்கிறார்கள் என்று ஏதேனும் லிங்க் கொடுக்க முடியுமா? //

//லிங்க் எதுவும் என்னிடம் இல்லை. நண்பர் ஒருவர் நேரில் சொன்னது.//

அண்ணே ஒரு ப்லோல வந்துருச்சி

தீக்கனல் said...

//டிகர்களும் அரசியல்வாதிகளும் சாமியார்களும் தங்களுக்கான ரசிகர் கூட்டத்தைக் கட்டமைக்க தங்கள் நேரத்தின் பெரும்பகுதியைச் செலவிடுகிறார்கள். பெரும் தொகையையும். ரசிகர்கள் இல்லாமல் அவர்களால் இயங்கமுடியாது. ஹிட்லர் பிரசார இயந்திரத்தைப் பயன்படுத்தியே தனக்கான ஒரு வெறிபிடித்த ரசிகர் கூட்டத்தைக் கட்டமைத்தார். இன்றளவும் அவர் மரியாதையுடன் வணங்கப்படுகிறார். சாரு அதிகம் மெனக்கெடவில்லை. பணமும் கொடுத்து, அவர் எழுத்தையும் படித்து, அவருடைய அத்தனை வக்கிரங்களையும் புன்னகையுடன் ஏற்று, அவரைக் கொண்டாடவும் தயாராக இருக்கிறார்கள் ரசிகர்கள். ஹிட்லரால்கூட சாதிக்கமுடியாததை சாரு சாதித்துக்காட்டியுள்ளார். இதற்காக அவர் தாராளமாகப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
//

நல்ல வரிகள் மருதன். காட்டமான கட்டுரை.

சுதிர் said...

இன்னமுமா உலகம் சாருவை நம்பிக்கிட்டிருக்கு? இப்படிப்பட்ட பொறுக்கிகளை நடு வீதியில் நிற்க வைத்து சுட வேண்டும். அக்கா, தங்கையுடன் பிறந்த யாராவது சாருவை சப்போர்ட் செய்வார்களா?

Anonymous said...

எனக்கு சாருவின் மேல் மரியாதையும் கிடையாது. அதற்கு காரணம் சாருவின் பெண் பித்தம் அல்ல. அவரது போலித்தனங்கள்தான். போலிகளில் 4வகை போலிகள் உண்டு என்றும் அதில் சாரு எந்த வகை போலி என்றும் இந்த பதிவில் கமென்ட் செய்திருந்தேன். சிலமாதங்கள் முன்பு தன் பிளாகில் எஸ்.ராமகிருஷ்ணன் என்ன கோமாளியா என்று ஒரு மடத்தனமான அரிப்பெடுத்த போலி கட்டுரையை எழுதி எஸ்.ராவை மறைமுகமாய் கேவலப்படுத்தி வயிற்று எரிச்சலை சரி செய்து கொண்டார் சாரு. சாருவுக்கு ஒரு ஃப்ராடு வேலையை உருப்படியாக செய்யக் கூட தெரியவில்லை...இவரை பற்றி ஏன் மருதனும், மற்றவர்களும் மாறி மாறி கட்டுரை எழுதி குவிக்கின்றீர்கள்?

சாருவின் ரசிகர்கள் சாருவை எதிர்ப்பதை நினைத்து கொதிக்க காரணம் என்ன தெரியுமா? சாருவைப் பற்றி அவர்கள் மனதில் ஏற்கனவே ஒரு பிம்பம் உள்ளது. அது தாக்கப்பட்டால் இந்த ரசிகர்களுக்கு தாங்களே தாக்கப்பட்ட மாதிரி. அதாவது சாருவைப் பற்றிய அவரது ரசிகனின் அபிப்ராயம் உண்மையில் அவனேதான். அதாவது இன்னொரு அவன். அவனே அறியாமல்தான் அந்த ரசிகன் இப்படி கொதித்து போய் எரிச்சல் ஆகின்றான். அவனை போய் கேளுங்கள். "சாருவுக்காகவே நான் கோபப்படுகிறேன்" என்பான்.

கடைசியாக ஒன்று...

பெண்களுக்கு சப்போர்ட்டாக நீங்கள் எதை எழுதினாலும் எரிச்சலாகவே எனக்கு வருகிறது. பெண்ணை அறியாதவனால் தன்னை அறிய முடியும் என்று தோன்றவில்லை எனக்கு.d.

Anonymous said...

உண்மை தான் ,வாசகன் என்ற நிலையில் இருந்து ரசிகனாகி பின் வெறி பிடித்த ரசிகனாகிவிட்டார்கள் .. இப்போது இந்த வெறி பிடித்த ரசிகன் சாரு என்ன சொன்னாலும் செய்தாலும் அதில குடைஞ்சு நோண்டி நியாயப்படுத்தவே முயலுவார்கள்...

பாருங்களன் தனி மனித வழிபாடு ஒருவனை எப்படி எல்லாம் முடமாக்குகிறது என்று

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

இப்படி ஒரு கோணம் எனும் அளவில் ரசித்தேன். நாட் தெ கன்டன்ட்.

மருதன் said...

சந்திரமௌளீஸ்வரன் : உங்கள் கருத்து என்ன?

Anonymous said...

நல்ல கட்டுரை மருதன். சாருவின் ரசிகர்கள் நேர்மையாக பதில் சொல்லட்டும்

Anonymous said...

சாருவை சொல்வதற்கு வினவு ஒன்றும் யோக்கிய சிகாமணி அல்ல. அவர்களால புர்ரட்சியும் பண்ண முடியாது. பணியாரமும் சுட முடியாது.சொல்லப்போனால் ஒழுங்காக மலம கூட போகமுடியாது. காரணம், அவர்களுக்கு எல்லாமே சிக்கல். தமிழச்சிக்கும் இதே தான். இந்தியாவில் மூளை மழுங்கி போய் முருகனையும், சிவனையும் கும்பிடும் அப்பாவிகளை திருத்த பெரியார் புரட்சியை பாரிசில் உக்கார்ந்து செய்கிறார். என்ன ஒரு பெரியார் பற்று...!
இணைய தளத்தில் வந்து சாட் செய்யும் பெண்கள் சாரு போன்ற நபர்களிடம் போலி மயக்கத்தில் வீழ முடியாது. அந்த அளவுக்கு அ.ஆ ..கற்று கொண்டிருக்கும் பெண்கள் இங்கு வருவதும் இல்லை. உடன் பிறந்த சகோதரி தவிர மற்ற பெண்களிடம் பேசுகையில் ஆண்களுக்கு பாசமலர் தங்கை பாசம் எல்லாம் இருப்பது குறைவு என்பதை ஆண்மை உள்ள ,அல்லது ஒரிஜினல் பெண்மை உள்ளவர்கள் ஒத்து கொள்ள தான் வேண்டும். இதெல்லாம் தெரியாமல், அல்லது அவன் எந்த நோக்கத்திற்கு வருகிறான் என்று தெரியாமல் பிறகு " என்ன அவன் கூப்பிட்டான் " என்று கூவுவது, திகார் சிறைக்கு போய் கொசுக்கடிக்குது என்று சொல்வது போல தான்.

virutcham said...

முன்னே எல்லாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் கிட்டத்தட்ட பழமொழி மாதிரியே ஆகி விட்ட ஓன்று அவ/ன் கிட்டே போய் மட்டும் சொல்லிடாதே அப்புறம் BBC ஒளிப்பரப்பு ஆயிடும்னு சொல்லும் சொல்லாடல் ஓன்று இருந்தது. இப்பவும் இருக்குனு நினைக்கிறேன். அது மாதிரி கதையால்ல இருக்கு. யாருக்காவது ஏதாவது பிரச்சனைனா அதை இப்படித் தான் போஸ்டர் அடித்து ஒட்டாதா குறையா, BBC ஒளிப்பரப்பாத குறையா இணையத்தில் இப்படி வெட்ட வெளிச்சமாக்குவது தான் ஒருவரின் முகத் திரையை கிழிக்கும் அழகா?

இதை எல்லாம் பிரபலப்படுத்துவது விடுத்து நேரடியாக யாராவது இதுஉண்மையா என்று சம்பந்தப்பட்டவர்களை வைத்து ஒருமுறையாவது பேசிப்பார்த்து நேரடியாகத் திட்டி தீர்த்தோ அல்லது கடிதம் மூலமோ அணுகி, தன பெயர் வெளியிட விரும்பாத அந்தப் பெண்ணுக்காக சட்டபூர்வமாகக் கூட யாராவது முயற்சி செய்து என்று எவ்வளவு வழிகள் இருக்கு? அதை விடுத்து இது என்ன பாரு பாரு கேளு கேளு என்று டமாரம் அடித்துக் கொண்டு?

இது பிரச்சனையை தீர்க்கும் முயற்சி அல்ல? குழாய் அடியில் கிசு கிசு வம்பு பேசும் தரத்தில் இருக்கிறது.

இதில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் கிடைத்து விட்டதா என்று அவருக்காக உழைத்தவர்கள் கேட்டு சொல்லலாம். பெண் மேலும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி ஏண்டா சொல்லித் தொலைத்தோம் என்று குமைந்து கொண்டிருக்கும் வாய்ப்பு தான் தெரிகிறது.

srinivasansubramanian said...

சாருவின் ”சரோஜாதேவி”பாணி எழுத்துக்குத்தான் அவரது ரசிகர் கூட்டம் அடிமையாகி கேவலமான எழுத்தாளனை தாங்கிப்பிடிக்கிறது.மற்றபடி அவரின் எழுத்துலக சாதனை ஏதும் இல்லை.ஆனால் சாரு வெறியர்களின் கருத்தில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்துக்களும் உள்ளது.இப்படி மஞ்சள் எழுத்தாளரிடம் அந்த பெண்மணி ஏன் தொடர்பு வைத்துக்கொண்டார்.அவரின் நீலத்தனமான குணம் அறிந்தும் தொடர்ந்து சாட் செய்யாமல் துண்டிக்காமல் இருந்தார்.பேச்சைத்துண்டிக்காமல் தொடர்ந்தது பித்துக்குளித்தனம்.பாலியல் எழுத்தாளனுடன் ,இவ்வளவு தூரம் இடம் கொடுத்து சாட் செய்த அந்த பெண்ணும் ஒரு குற்றவாளியாகத்தான் தெரிகிறார்.

Anonymous said...

Good one Marudhan!

ஆர் கே ஆர் said...

சுரன் அவர்களே,

//அவரின் நீலத்தனமான குணம் அறிந்தும் தொடர்ந்து சாட் செய்யாமல் துண்டிக்காமல் இருந்தார்.பேச்சைத்துண்டிக்காமல் தொடர்ந்தது பித்துக்குளித்தனம்.பாலியல் எழுத்தாளனுடன் ,இவ்வளவு தூரம் இடம் கொடுத்து சாட் செய்த அந்த பெண்ணும் ஒரு குற்றவாளியாகத்தான் தெரிகிறார்.//

நீங்களும் ஏன் அந்த பெண்ணை திட்டுகிறீர்கள்? ஆண்கள் இப்பதான் என்று பெண்கள் ஒதுங்கி போக வேண்டியதுதானா? அது தான் ஒரே வழியா? சம்பந்தப்பட்ட அந்த பொறுக்கி சாருவை அப்படியே விட்டுவிடுவதா? யோசித்து பாருங்கள்.

தினேஷ் said...

சாருவை மாட்டி விடுவதற்காக தமிழச்சியும் அந்த பெண்ணும் சேர்ந்து இந்த சாடடை நடத்தியிருககிறார்கள் என்று நினைக்கிறேன். இது சரியா?

மருதன் said...

//சாருவை மாட்டி விடுவதற்காக தமிழச்சியும் அந்த பெண்ணும் சேர்ந்து இந்த சாடடை நடத்தியிருககிறார்கள் என்று நினைக்கிறேன். இது சரியா?//

தினேஷ் : சாருவை அம்பலப்படுத்திய பாதிக்கப்பட்ட பெண், தமிழச்சி,வினவு ஆகியோர் பாராட்டுதலுக்குரியவர்கள் என்பது என் கருத்து.

ஆர் கே ஆர் said...

//உடன் பிறந்த சகோதரி தவிர மற்ற பெண்களிடம் பேசுகையில் ஆண்களுக்கு பாசமலர் தங்கை பாசம் எல்லாம் இருப்பது குறைவு என்பதை ஆண்மை உள்ள ,அல்லது ஒரிஜினல் பெண்மை உள்ளவர்கள் ஒத்து கொள்ள தான் வேண்டும். //

யோவ் அனானி, சொந்த பெயரில் எழுதுவதற்கு துணச்சல் இல்லாத நீயெல்லாம் அட்வைஸ் செய்யவில்லை என்று யார் அழுதார்கள்? வந்துட்டாரு.........

தினேஷ் said...

சாருவின் கட்டுரைகள் மட்டும ரசித்துவிட்டு அவர் தனிப்பட்ட வாழ்ககையை புறக்கணிக்க முடியாதா? உலக இலக்கியம் பற்றியும் சினிமா பற்றியும் தத்துவம் பற்றியும் அவர் பலவற்றை எழுதியிருககிறார். அவற்றையும் நிராகரிக்க வேண்டியது தானா?

மருதன் said...

தினேஷ்:

வினவு கட்டுரையில் உங்கள் கேள்விக்கான பதிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள். சந்தேகம் இருந்தால் விவாதிக்கலாம்.

virutcham said...

@மருதன்

சம்பந்தப்பட்ட எழுத்தாளர் மேல் இணையத்தில் மற்றும் இலக்கிய உலகில் பெரிய அபிப்பிராயம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் அவர் இழந்தது என்று சொல்ல பெரிதாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பாதிக்கப் பட்ட பெண் என்று நீங்களே சொல்லி இருப்பதால் அந்த சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கிடைத்தது மன ஆறுதலா அல்லது மேலும் மன உளைச்சலா என்பதை நீங்க சொல்லவே இல்லையே. பிரச்சனையை தீர்க்க எல்லோரும் உதவினார்களா அல்லது பிரச்சனையை பிரபலப்படுத்த உதவினார்களா? ஒருவரின் தோலுரிக்க ஒரு பெண்ணை மேலும் கூட்டுக்குள் முடக்கியதைத் தவிர இதில் ஏதாவது உபயோகமா நடந்ததா?

ரவி said...

Well Done !!!

வெண்பூ said...

//
அவர்களுடைய தர்க்கம் எளிமையானது. சாருவை எதிர்க்கிறாயா? எனில் நீ என் எதிரி.
//

இதை யார் சொல்வ‌து? எங்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌வில்லையா, அப்ப‌டின்னா நீ சாரு அடிவ‌ருடி.. இதுதானே வின‌வும் சொல்லியிருப்ப‌து. எதிர்க‌ருத்து சொல்லும் அனைவ‌ரையும் ஒரே அள‌வுகோலில் வைத்து திட்டும் வின‌வுக்கு ஆத‌ர‌வாக‌ நீங்க‌ள் இதை சொல்வ‌து காமெடியாக‌ இருக்கிற‌து....

வெண்பூ said...

//
இவர்களுடைய பதிவுகளில் எத்தனை ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதைப் பட்டியலிடவா?
//

இதை இல்லை என்று மறுக்கிறீர்க‌ளா? ப‌திவை விட‌ வின‌வின் க‌மென்ட்டுக‌ளில் வ‌ரும் இர‌ட்டை அர்த்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள் எவ்வ‌ள‌வு எல்லை மீறிய‌வை என்று உங்க‌ளுக்கு தெரியாதா ம‌ருத‌ன்? பெண்ணுரிமைக்காக‌ போராடுவ‌தாக‌ சொல்லிக்கொள்ளும் வின‌வை எந்த‌ குடும்ப‌‌ பெண்ணாவ‌து வ‌ந்து பார்த்து க‌ருத்து சொல்ல‌ முடியும் என்று நினைக்கிறீர்க‌ளா? அல்ல‌து அவ‌ர்க‌ளும் வ‌ந்து இந்த‌ கெட்ட‌ வார்த்தை உரையாட‌ல்க‌ளில் ப‌ங்கேற்று பெண்ணுரிமையை நிலைநாட்ட‌ நீங்க‌ள் அமைத்து கொடுக்கும் த‌ள‌மா அது?

வெண்பூ said...

வின‌வு / நீங்க‌ள் பெண்ணுரிமைக்காக‌ போராடுவ‌து செல‌க்ட்டிவ் ஆக‌வா? த‌மிழ‌ச்சி ரோகிணியின் புகைப்ப‌ட‌த்தை அவ‌ர் அனும‌தி இல்லாம‌ல் பிர‌சுரித்த‌து குறித்து உங்க‌ள் க‌ருத்து என்ன‌? ஏன் அது குறித்து நீங்க‌ள் பேசுவ‌து கூட‌ இல்லை?

வெண்பூ said...

இந்த‌ வின‌வு ப‌திவிலோ பின்னூட்ட‌த்திலோ ப‌டித்த‌ நினைவு "இந்த‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் எல்லாம் த‌ங்க‌ள் வீட்டுப் பெண்க‌ளை சாருவிட‌ம் இருந்து காப்பாற்றிக் கொண்டு வெளியே வ‌ந்து சாருவுக்கு ஆத‌ர‌வ‌ளிக்கிறார்க‌ள்" என்ற‌ ரீதியில் இருந்த‌ க‌ருத்து... எதிர்க‌ருத்து சொல்ப‌வ‌னின் குடும்ப‌ம் முத‌ற்கொண்டு இழுத்தால் அப்புற‌ம் எவ‌ன் வ‌ந்து ஆரோக்கிய‌மாக‌ விவாதிப்பான்..

1. நீ என‌க்கு ஆத‌ர‌வில்லை என்றால் எதிரிக்கு அடிவ‌ருடி
2. உன் குடும்ப‌ பெண்க‌ளை நான் திட்டுவேன்
3. பெண்ணுரிமை எல்லாம் செல‌க்ட்டிவ்வாக‌ சில‌ருக்காக‌ ம‌ட்டுமே
4. கெட்ட‌ வார்த்தைக‌ளையும் ஆபாச‌ வ‌ச‌வுக‌ளையும் இர‌ட்டை அர்த்த‌ க‌ருத்துக‌ளையும் தாராள‌மாய் புழ‌ங்குவேன்

இதுதானா நீங்க‌ள் புர‌ட்சி செய்யும் முறை?

வெண்பூ said...

//
ஆழமான சம்மிங் அப் கட்டுரையையும்
//

எதிர்க‌ருத்து சொன்ன‌ எல்லாரையும் ஒரே அளவுகோலில் வைத்து திட்டுன‌து ஆழ‌மான‌ க‌ட்டுரையா?

வெண்பூ said...

முந்தைய‌ க‌மென்ட்டில் எழுத்துபிழை. ம‌ன்னிக்க‌வும்.

செந்த‌ழ‌ல் ர‌விக்கு ந‌ன்றி... அவ‌ர் ப‌ஸ்ஸில் ப‌கிர்ந்த‌தை வைத்துதான் இங்கே வ‌ந்து ப‌டித்து இந்த‌ கேள்விக‌ளை எழுப்ப‌ முடிந்த‌து..

மருதன் said...

வெண்பூ : சாரு விவகாரம் பற்றிய உங்கள் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன். இந்தப் பிரச்னையை எப்படிக் கையாண்டிருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

வெண்பூ said...

ம‌ருத‌ன், இதை எப்ப‌டி கையாண்டிருக்க‌ வேண்டும் என்று என்னால் சொல்ல‌ முடியாம‌ல் இருக்க‌லாம் (இந்த‌ ப‌திலைத்தான் நீங்க‌ளும் எதிரிபார்க்கிறீர்க‌ள் என்று தெரியும்)... ஆனால் இதை அந்த‌ பெண்ணுக்கு ஆத‌ர‌வான‌வ‌ர்க‌ள் கையாண்ட‌ வித‌ம் ச‌ரிய‌ல்ல‌ என்ப‌தே என் நிலைப்பாடு. நிச்ச‌ய‌ம் அந்த‌ பெண்ணுக்கு தீர்வைத் தேடித் த‌ருவ‌தை விட‌ மென்மேலும் காய‌த்தை குத்திக் கிள‌ற‌வே செய்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

மருதன் said...

வெண்பூ : விவாதத்தைத் தொடர்ந்து நகர்த்திச் செல்லவே அந்தக் கேள்வியைக் கேட்டேன். வேறு நோக்கமில்லை.

1) சாரு செய்தது தவறு என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்காது.

2) இவ்வாறு நடப்பது முதல் முறையல்ல என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

3) பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களால் தங்களுக்கு நேர்ந்ததைத் துணிச்சலாக வெளியில் சொல்லமுடிவதில்லை என்பதையும் அத்ற்கான காரணம் என்ன என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

4) பாதிக்கப்பட்ட இந்தப் பெண் மற்றவர்களைப் போல் தனக்கு நேர்ந்ததை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம் என்னும் வாதத்தை நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

5) சாரு செய்தது அயோக்கியத்தனம்தான் ஆனால் இந்தப் பெண்ணுக்கு எங்கே போனது புத்தி என்னும் கேள்வி எவ்வளவு அபத்தமானது, ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

6) இந்தப் பின்னணியில்தான் தமிழச்சியும் பின்னர் வினவும் அந்தப் பெண்ணுக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள்.

7) சம்பந்தப்பட்ட பெண் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதைச் சொல்லாமல் சாருவைக் குற்றவாளியாக்கிவிடமுடியாது. இவ்வளவு ஆதாரங்களைக் கொடுத்தபிறகும் சாருவுக்கு ஆதரவு அளிக்கவும் அவர் தவறை மன்னிக்கவும் பலர் ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆதாரமே அளிக்காமல் இருந்திருந்தால் குற்றச்சாட்டு அவதூறாகவே பார்க்கப்பட்டிருக்கும். சாருவை அம்பலப்படுத்துவதன் மூலமாக மட்டுமே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஆதரவான குரல்களைத் திரட்டமுடியும். சாருவையும் எதிர்கொள்ளமுடியும்.

ஒப்புக்கொள்கிறீர்களா?

வெண்பூ said...

ம‌ருத‌ன் உங்க‌ளின் இந்த‌ கேள்விக‌ளுட‌ன் 100 ச‌த‌வீத‌ம் ஒத்துப் போகிறேன் (சாருவை க‌ண்டிப்ப‌து உட்ப‌ட‌). ஆனால் ஆர‌ம்ப‌த்தில் இருந்து இந்த‌ பிர‌ச்சினை ந‌க‌ர்த்த‌ப்ப‌ட்ட‌ வித‌ம் எத்த‌னை எத்த‌னை குழ‌ப்ப‌ங்க‌ளை ஏற்ப‌டுத்திய‌து என்ப‌து நீங்க‌ள் அறியாத‌தா? அவ்வ‌ளவு பி ஜி எம், ப‌ட‌ங்க‌ளுட‌ன் வீடியோ எல்லாம் ச‌ரி, அதில் ஒரு சில‌ வ‌ரிக‌ள் அதுவும் சாரு எழுதிய‌து ம‌ட்டுமே சொல்ல‌ப்ப‌ட்ட‌து ச‌ரியா?

சாருவிற்கு புனித‌ர் ப‌ட்ட‌ம் க‌ட்ட‌ முய‌ற்சித்த‌ அவ‌ர‌து தீவிர வாச‌க‌ர்க‌ளை விடுங்க‌ள். கேவிஆர், ரோகிணி போன்ற‌ சாருவுட‌ன் எந்த‌ வித‌த்திலும் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டாத‌வ‌ர்க‌ளே கூட‌ தைரிய‌மாக‌ வெளியில் வ‌ந்து ச‌ந்தேக‌த்தை கிள‌ப்பும் வ‌கையில் மொன்னையாக‌த்தானே அந்த‌ ஆதார‌மே இருந்த‌து. அந்த‌ கேள்விக‌ள் கேட்க‌ப்ப‌ட்ட‌தும் என்ன‌ செய்திருக்க‌ வேண்டும், அதுகுறித்த‌ ச‌ந்தேக‌ங்க‌ளை க‌ளைந்திருக்க‌ வேண்டாமா?

ஆனால் என்ன‌ ந‌ட‌ந்த‌து, இந்த‌ வின‌வு ப‌திவு வ‌ரை, கேள்வி கேட்ட‌வ‌ர்க‌ளை தூற்றுவ‌து, அவ‌ர்க‌ளின் குடும்ப‌ப் பெண்க‌ளை வ‌ம்பிழுப்ப‌தும்தானே... அந்த‌ ஆழ‌மான‌ வின‌வு ப‌திவையும் க‌மென்ட்க‌ளையும் ப‌டித்துப் பாருங்க‌ள் ம‌ருத‌ன். இந்த‌ பிர‌ச்சினையை பேசுவ‌தை விட‌ இந்த‌ பிர‌ச்சினையில் உங்க‌ளுக்கு எதிர்க‌ருத்து சொன்ன‌வ‌ர்க‌ளை பீரி பிறாய்ண்டுவ‌தே அதிக‌மா இருப்ப‌தாக‌ உங்க‌ளுக்கு தோன்ற‌வில்லையா?

சொல்ல‌ப்போனால் சாரு அந்த‌ பெண்ணிட‌ம் வ‌ழிந்த‌த‌ற்கு எந்த‌ அளவிலும் குறைவில்லாத‌ ஆபாச‌ம் தானே இருக்கிற‌து (சில‌ உதார‌ண‌ங்க‌ள்: போய் சாருவுக்கு ப‌ர்ர்ர்ர்ர்ர்ர்ச‌ன‌ல் ஹெல்ப் எதாவ‌து செய்யி.... வ‌ய‌சாயிடுச்சில்ல‌ எழுந்து நிக்க‌ மாட்டேங்குதாம்)...

வின‌வையோ உங்க‌ளையோ அல்ல‌து அந்த‌ பெண்ணையோ குறை சொல்வ‌து என் நோக்க‌ம் அல்ல‌. நாங்க‌ள் சொல்வ‌தை கேளுங்க‌ள் , செய்யுங்க‌ள், இல்லையேல் நாங்க‌ள் சேற‌டிப்போம் என்ப‌துதானே ந‌ட‌க்கிற‌து.

உண்மையில் இந்த‌ விவாத‌ம் செய்ய‌க்கூட‌ என‌க்கு பய‌மாய் இருக்கிற‌து மருத‌ன். எந்த‌ நேர‌த்தில் யார் என்னை கெட்ட‌ வார்த்தையில் திட்டுவார்க‌ளோ என்று ப‌ய‌ந்துகொண்டேதான் இதை எழுதுகிறேன். இந்த‌ ப‌ய‌த்தை விதைப்ப‌துதான் உங்க‌ள் வெற்றியா?

மருதன் said...

வெண்பூ :

இங்கே நீங்கள் தயங்காமல், அஞ்சாமல் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம்.

வினவு கட்டுரையை மட்டுமே நான் பரிந்துரைக்கிறேன். அதில் பல்வேறு வகைப்பட்ட பின்மொழிகள் இடம்பெறுகின்றன. பல்வேறு அரசியல் கருத்துகள் உள்ளவர்கள் அங்கே மோதிக்கொள்கிறார்கள். பல சமயங்களில் வார்த்தைகள் தடித்துவிடுவதும் உண்மைதான். ஆபாசமான பல பதங்களை நான் மறுமொழிகளில் கண்டிருக்கிறேன். அவற்றை நாம் ஏற்கவேண்டியதில்லை. ஆனால், வினவின் படைப்புகளில் எந்தவித ஆபாசத்தையும் நான் காணவில்லை.

மற்றபடி உங்களோடு ஆரோக்கியமான முறையில் விவாதங்கள் நடத்தவே நான் விரும்புகிறேன். எனவே, தொடர்ந்து எழுதுங்கள். கருத்துகள், எதிர்கருத்துகள் இரண்டையும் பதிவு செய்யுங்கள். நூறு பூக்கள் மலரட்டும் என்னும் மாவோவின் பொன்மொழியை இங்கே நினைவுகூற விரும்புகிறேன். நன்றி.

Anonymous said...

//உடன் பிறந்த சகோதரி தவிர மற்ற பெண்களிடம் பேசுகையில் ஆண்களுக்கு பாசமலர் தங்கை பாசம் எல்லாம் இருப்பது குறைவு என்பதை ஆண்மை உள்ள ,அல்லது ஒரிஜினல் பெண்மை உள்ளவர்கள் ஒத்து கொள்ள தான் வேண்டும். //------> I smiled a lot while reading this......yidhu unmai dhaanae....Y that உத்தமசிகாமணி RKR is getting tensed...?

அரவிந்தன் நீலகண்டன் said...

மாவோ தன் அதிகாரத்தை பயன்படுத்தி செய்தவற்றை விடவா இது மோசம்? சாரு செய்தது தவறில்லை என நான் சொல்லவில்லை. ஆனால் மாவோ போன்ற காமாந்தகார அதிகார வெறியனை விதந்தோதுபவர்களுக்கு சாருவை சொல்லும் தார்மீக உரிமை இருக்கிறதா என்ன? (உதாரணத்துக்கு The private life of Chairman Mao: the memoirs of Mao's personal physician நூலை பார்க்கவும்)

மருதன் said...

அரவிந்தன் : சாருவை விமரிசிக்க உங்களுக்கு மட்டுமே தார்மிக உரிமை இருக்கிறது என்னும் பட்சத்தில் நீங்களே அவரை விமரிசித்திருக்கலாமே!

மருதன் said...

அரவிந்தன் : மாவோவின் private life மட்டுமல்ல political life பற்றியும்கூட பல நூறு அவதூறு நூல்களும் கட்டுரைகளும் உள்ளன என்பதை நானறிவேன். உங்கள் சிபாரிசுக்கு நன்றி.