November 15, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் : நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை! நண்பர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக முதல் முறையாக இன்றுதான் வந்தேன். இதை அரசு நூலகம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஸ்பென்சர்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூ, சிட்டி சென்டர் என்று பல ஷாப்பிங் மால்களுக்குச் சென்றிருக்கிறேன். இத்தனை வசதிகளை எங்கும் பார்த்ததில்லை!’ உமருக்கு இது முதல் வருகை என்பதால் அவரால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. ‘இனி ஒவ்வொரு வாரமும் குழந்தைகளுடன் வந்திருந்து முழு நாள் செலவிடப்போகிறேன்.’ நூலக இடமாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  ‘வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்றிருக்கிறேன். உண்மையாகவே இது முதல் தரம்.  இந்தியாவுக்கே பெருமை அளிக்கக்கூடிய இந்த அடையாளத்தை என்ன நடந்தாலும் விட்டுக்கொடுக்கக்கூடாது.’

தொடர்ந்து வாசிக்க >>

முன்னாள் முதல்வர்மீது இந்நாள் முதல்வர் கொண்டிருக்கும் விரோதத்தின் காரணமாகவே நூலக இடமாற்ற திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது என்னும் வாதம் முழு உண்மையல்ல. சமச்சீர் கல்வி முறையை மாற்ற ஜெயலலிதா விரும்பியதற்கும்  அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய தற்போது விரும்புவதற்கும் உள்ள ஒற்றுமையை நாம் ஆராய வேண்டும். அனைவருக்கும் பொதுவான சமச்சீர் கல்வியையும் அனைவருக்கும் பொதுவான ஒரு பிரமாண்டமான நூலகத்தையும் ஜெயலலிதா வெறுப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? இரண்டு திட்டங்களும் கருணாநிதியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என்பது மட்டும்தானா?

அல்லது, 'அனைவருக்கும் பொதுவான' என்னும் அடிப்படை கொள்கையிலேயே அவருக்கு விருப்பமில்லையா? சமச்சீர் கல்வியும் அண்ணா நூலகமும் பொதுமக்கள் நலன் சார்ந்து, குறிப்பாக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்களின் நலன் சார்ந்து கொண்டு வரப்பட்ட திட்டங்கள். இரண்டுமே அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு உதவுபவை. சமச்சீர் பாடத்திட்டத்தில் ஏகப்பட்ட தவறுகள் உள்ளதாகச் சொல்லி அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஜெயலலிதா. தற்போது, அதே காரணங்களைச் சொல்லி, நூலகத்தை இடமாற்றம் செய்ய துடிக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு சேர்த்து, இன்னொன்றையும் நாம் செய்யவேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்த ஆரம்பிக்கவேண்டும். நமக்குத் தெரிந்தவர்களுக்குச் சிபாரிசு செய்யவேண்டும். நூலகத்தில் கிடைக்கும் நூல்களைப் பற்றியும் அங்குள்ள வசதிகளைப் பற்றியும் வலைத்தளத்தில் விரிவாக எழுதவேண்டும்.  நூலகத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால்தான் போராட்டம் வலுபெறும்.

6 comments:

SURYAJEEVA said...

அருமையான கருத்துக்கள்... அருமையான சிந்தனைகள்... அனைவருக்கும் பொது என்று முதல்வர் விரும்பவில்லை என்று கூறியது கொஞ்சம் இடிக்கிறது... அவர் கட்ட நினைக்கும் மருத்துவமனையும் பொது தானே... இல்லை அதிலும் வர்க்கம் வருகிறதா... கண்டிப்பாக இது பெயர் பலகையில் இருந்து கலைஞர் பெயரை நீக்க வேண்டும் என்ற வெறியே தெரிகிறது.. மேலும் ஏதாவது ஜோசியர்கள் ஏதாவது சொல்லி இருக்கிறார்களா என்று தெரியவில்லை...

sons of soil said...

சென்னையை சார்ந்த அறிவுஜீவிகள் இந்த செயல்பாட்டை ஆரம்பிப்பதன் முலம் தமிழகதில் இந்த அண்ணா நூலகம் நூற்றாண்டு தமிழர் வரலாற்றில் பெரும் பங்கு வசிக்க முடியும்

NO said...

புழுதியில் எறியப்படும் பொன் - திரு மருதனின் புதிய கண்டுபிடிப்பு!

டைடில்லை மாற்றவேண்டும் நண்பரே. புழுதியில் எறியப்படும் பழுது!!!

விளக்கில்லாத, உட்கார இடம் இல்லாத, புத்தகங்கள் பாதுகாப்பாக இல்லாத, உள்ளே போனால் கப்பை தாங்காமல் துரத்தகூடிய, புத்தகங்கள் வாங்க காசில்லாத
நூலகங்கள் தமிழகமெங்கும் ஆனாதயாக இருக்கின்றது! அது ஒருபுறம். அதை பற்றி எல்லாம் கவலை ஏதும் படாது, கோடானகோடி செலவில், ஒரு பிளானே
இல்லாத புத்த கொள்முதல் செய்யப்பட்டு, சாமானியர்கள் போக முடியாத இடத்தில் அதை கட்டி, ஒரு ஒன்பது நட்சத்திர ஓட்டல் கணக்கில் அதை வடிவமைத்து,
ரன்னிங் செலவை கண்டபடி இழுக்கும் ஒரு பூதாகர இடத்தை அமைப்பது என்பது பொன் அல்ல. பழுது மட்டுமே!!

நாரிக்கொண்டிருக்கும் நூலகங்களை சரி செய்ய ஒரு துரும்பையும் எடுத்து போடாமல், பிசாசு போல பணம் விழுங்கிய, விழுங்கும், விழுங்கப்போகிற
ஒன்றை, அதையும் தன்னின் பொய்யான "பொன்னான ஆட்சியின்" சாட்சியாக அமைக்கப்பட்ட ஒன்றை முதலில் நூலகம் என்று சொல்லுவதே மடமை.

ஜீன் போக்காசா என்ற ஆப்ரிக்க கொடுங்கோலன் சோறுக்கு கூட வழி இல்லாத தன் நாட்டின் பல வருட வருவாயை தன்னின் முடி சூட்டலுக்காக ஒரே நாளில்
காலி செய்த மட செயலை தான் இந்த நூலகம் நினைவு படுத்துகிறது!

கட்டப்பட்டது நூலகம் அல்ல. பழுதான தன் ஆட்சியை மறைக்க ஒரு பழுதான அரசன் எழுப்பிய பழுதான பொய் பிம்பம் மட்டுமே!!

அதை மூடுவதில் தப்பே இல்லை!!!!

(நான் பல வருடங்களாக நூலகங்களுக்கு செல்பவன். கன்னிமாராவிர்க்கும், தேவநேய பாவாணர் நூலகத்திற்கும், சென்னை மத்திய நூலகத்திற்கும் போவதை பல வருடங்களுக்கு முன்னரே நிறுத்திவிட்டேன்!! காரணம் மேலே சொல்லியாகிவிட்டது! இந்த புதிய நூலகத்திற்கு சென்று
எல்லா ப்ளோர் களையும் ஆராய்ந்து விட்டேன்! எப்படி பட்ட புத்தகங்கள் யாரிடத்திலிருந்து எப்படி வாங்கப்பட்டது என்பதை விபரம் தெரிந்தவர்களுக்குவிளங்கும். ஆதலால், சொல்லுவது ஒம்ன்றுதான் - இது மக்களுக்காக கட்டப்பட்ட நூலகம் இல்லை இல்லை!. இதை மூடவதில் தவறே இல்லை)

Its obvious that Mr. Marudhan has the least understanding of the economic models employed in public infrastructure! Obviously his joy is in parroting political rhetoric rather than facts on the table!!

வேண்டுமென்றால் திரு பத்ரியிடம் கேளுங்களேன்! அவருக்கு நான் சொல்லுவது புரியும்!!

மருதன் said...

நோ : இதற்கு நீங்கள் அளிக்கும் தீர்வுதான் என்ன?

NO said...

மருதன் - அடிப்படை இல்லாத கேள்வி இது!

ஒரு முக்கியமான தீர்வை காண இந்த பிரச்சனை ஒன்றும் ரீடைல் வணிகத்தில் வரப்போகும் முதலீட்டு பிரச்சனையோ அல்லது இந்தியாவிடம் மேலை நாடுகள் சொல்லும் கார்பன் குறைப்பு பிரச்சனையோ அல்ல!! முட்டாள்தனமான ஒரு செயலை நிறுத்த எந்த நடவடிக்கை எடுக்க தேவையோ
அதைதான் செய்யவேண்டும்! அதன் பெயர் தீர்வு அல்ல, course correction என்பது மட்டுமே!!!!! அதைதான் இந்த அரசாங்கம் செய்திருக்கிறது!!!

முகமது பின் துக்ளக்கின் தலைநகர மாற்று தமாஷுக்கு தீர்வு காண்பது என்பதை விட, தடுத்து நிறுத்துவதுதான் அடுத்த செயல். அதற்க்கு தீர்வு என்று பெயர்
இல்லை!

Anonymous said...

எழுதி ஒரு மாதம் மேல் ஆகி விட்டதே அண்ணா?