August 3, 2012

அலுவலகத்தில் இருந்து விடுதலை கிடைக்குமா?

நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னை என்று ஆரம்பித்து எழுதப்படும் விஷயங்கள் அநேகமாக எழுதப்படுபவருக்கு நேர்ந்ததாக இருக்கும்.  இந்த அனுபவம் நிஜமாகவே நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டதுதான்.

ஒன்றுமில்லை. கஸ்டமர் ஒருவருக்கு அனுப்பவேண்டிய கொட்டேஷனில் அவர் தவறு செய்துவிட்டார். அதை மாற்றி, இதைப் போடு என்று ஒரு தொகையை துண்டுச்சீட்டில் எழுதி அவரிடம் கொடுத்திருக்கிறார்கள். ஏதோ நினைவில் தொகையை மாற்றாமல் அப்படியே கஸ்டமருக்கு ஈமெயில் அனுப்பிவிட்டார் நண்பர். 

தவறுதான், மன்னிக்கவும் என்று மன்றாடியும் அவர்கள் கேட்கவில்லை. 'இந்தத் தவறால் ஏற்பட்ட இழப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என்று எழுதிக்கொடுத்தால்தான் இனி வேலை செய்யமுடியும் என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டார்கள். 

நண்பரின் அலுவலகம் இப்படிப்பட்ட விஷயங்களுக்குப் பெயர் போனது என்று தெரிந்துகொண்டேன். யாரையும் ஒரு வருஷத்துக்கு மேல் வைத்துக்கொள்ளமாட்டார்களாம். ஏதாவது குற்றம் கண்டறிந்து, ஏதாவது பிரச்னை ஏற்படுத்தி தாமாகவே விலகிப்போய்விடுமாறு செய்துவிடுவார்களாம். என் நண்பனைப் போலவே பலரும் இவ்வாறு துரத்தப்பட்டிருக்கிறார்கள்.

செருப்பு போட்டுக்கொண்டு வேலை செய்யக்கூடாது (வாசல் வரை அனுமதிப்பார்கள்) என்பதில் தொடங்கி, செல்போன் பேசக்கூடாது, நண்பர்களை அலுவலகத்துக்கு வரவழைக்கக்கூடாது, சத்தம் போட்டு பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது, உணவு நேரம் ஒரு நிமிடம்கூட அதிகரிக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகளின் பட்டியல் நீண்டு விரிந்து செல்கிறது. 

தேநீர் ரேஷன் செய்யப்படும். எக்ஸ்ட்ரா கப் கூடாது. தலைவலி என்று பாசாங்கு செய்யக்கூடாது. உன் சவகாசமே வேண்டாம் நானே வெளியில் போய் குடித்துவிட்டு வருகிறேன் என்றால் அதற்கு அனுமதி கிடையாது. காலை 9.15க்கு அகற்றிய செருப்பை, இரவு வீட்டுக்குப் போகும்போதுதான் மாட்டிக்கொள்ளவேண்டும். எப்போது வீட்டுக்குப் போகவேண்டும் என்பதை அவர்களே சொல்வார்கள். மாலை ஏழு மணிக்கு பையைத் தூக்கினால் ஒரு மாதிரியான பார்வைகள் விழும்.

குறைந்தது இரண்டு ஆண்டுகள் வேலை செய்வேன் என்று ஒரு அக்ரிமெண்ட் எழுதி, ஒரு மாதச் சம்பளத் தொகையை முன்கூட்டியே கொடுத்துவிட்டுதான் அந்த அலுவலகத்தில் சேரமுடியும். நண்பனும் அவ்வாறு  சேர்ந்தவன்தான்.

இப்போது அவன் விலக முடிவுசெய்துவிட்டான். ஆனால் அவர்கள் விடுவதாகயில்லை. அப்படியே விட்டாலும் சம்பளம் தருவார்களா என்று தெரியவில்லை. சம்பளம் கொடுத்தாலும் அட்வான்ஸ் அநேகமாக காலி என்கிறார் நண்பர்.

இப்போது என் சந்தேகங்கள்.
  • பல அலுவலகங்களில் இப்படிப்பட்ட அக்ரிமெண்டுகளில் பலர் கையெழுத்து போட்டுள்ளனர். இது சட்டப்படி செல்லுபடியாகுமா? 
  • முன்தொகை வாங்கி ஒருவரைப் பணியில் அமர்த்துவது சட்டப்படி சரியானதா? அவர் ராஜிநாமா செய்யும்பட்சத்தில் இந்த முன்தொகையைத் திருப்பியளிக்கவேண்டும் என்பது கட்டாயம் இல்லையா?
  • ஒரு அலுவலகத்தில் ஒரு பணியாளருக்குக் கிடைக்கவேண்டிய குறைந்தபட்ச வசதிகள் என்னென்ன? 
  • என் தவறுகளால் நிர்வாகத்துக்கு ஏற்படும் இழப்பை என் சம்பளத்தில் இருந்து பிடித்துக்கொள்ளலாம் என்பதாக ஒரு கடிதம் எழுதி கொடுத்தால் அது சட்டப்படி செல்லுபடியாகுமா?
  • ஒரு டைபிஸ்ட் ஒரு சைபர் தப்பாக டைப் செய்துவிட்டால் அதன்மூலம் ஏற்படும் இழப்புகளுக்கு அவர்தான் பொறுப்பா? அல்லது, தொழிற்சாலையில் ஏதேனும் கவனக்குறைவால் இயந்திரம் பழுதாகிவிட்டால் சம்பந்தப்பட்ட தொழிலாளர்தான் அதை சரிசெய்து தரவேண்டுமா?  பணியில் ஏற்படும் தவறுகளுக்கு யார் பெறுப்பேற்பது / இழப்புகளை யார் ஈடு செய்வது?
  • சில மென்பொருள் நிறுவனங்கள் விலாவரியான ஒப்பந்தங்களை பணியாளர்களிடம் இருந்து வாங்கிக்கொள்கிறார்கள். இந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறி இத்தனை மாத காலத்துக்கு (அல்லது ஆண்டுகளுக்கு) இதே போன்ற வேறொரு அலுவலகத்தில் வேலை செய்யமாட்டேன் என்பது அதிலொரு விதிமுறை. அதாவது இன்ஃபோசிஸில் இருந்து வெளியேறி டிசிஎஸ் சேரக்கூடாதாம். இந்த ஒப்பந்தத்தை மீறுவது சட்டப்படி குற்றமா?
  • நண்பரின் அலுவலகத்தின்மீது ஏதாவது வழக்கு தொடுக்கமுடியுமா?

11 comments:

Jawahar said...

மேனேஜ்மெண்ட் கேடராக இருந்தால் வழக்கு செல்லாது.

http://kgjawarlal.wordpress.com

மருதன் said...

Executive-ஆக இருக்கிறார். உங்களைப் பொறுத்தவரை இவர் என்ன செய்யவேண்டும்?

Unknown said...

உங்களுடைய நண்பர் கவனமாக இருந்திருக்க வேண்டும். அது தவறுதான்.

என்றாலும் இந்த ரூல்ஸ் போடுறவங்கள தலையிலையே கொட்டனும். எதுக்கும் கம்பெனி அட்ரஸ் கொடுங்க... ஒரு ஆறு மாத காலம் நான் அங்கு வேலை செய்கிறேன்...

ஒக்காலா ஒழி, அவனுங்க ஜென்மம் சிந்தி போகணும்... அதுக்குத் தேவையானதை நான் செஞ்சிட்டு வந்துடறேன்.

Aandroan said...

மருதன் நீங்கள் சொன்னதில் பல நிறைய அலுவலகங்களில் நடக்கிறது. ஆனால் இந்த அலுவலகத்தில் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. உங்களிடம் ஒரு கேள்வி.. பணிக்கு செல்பவர்களில் எத்தனை பேர் வாங்குகிற ஊதியத்திற்கு ஒழுங்காக வேலை செய்கிறார்கள்..? அதே போல செய்கிற வேலைக்கு நியாயமான ஊதியம் கொடுக்கிறார்கள்..? இது குறித்தும் ஒரு பதிவு எழுதுங்களேன்

Aandroan said...

மருதன் நீங்கள் சொன்னதில் பல நிறைய அலுவலகங்களில் நடக்கிறது. ஆனால் இந்த அலுவலகத்தில் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. உங்களிடம் ஒரு கேள்வி.. பணிக்கு செல்பவர்களில் எத்தனை பேர் வாங்குகிற ஊதியத்திற்கு ஒழுங்காக வேலை செய்கிறார்கள்..? அதே போல செய்கிற வேலைக்கு நியாயமான ஊதியம் கொடுக்கிறார்கள்..? இது குறித்தும் ஒரு பதிவு எழுதுங்களேன்

ILA (a) இளா said...

அட்வான்ஸ்தான் முக்கியம். அவர் அட்வான்ஸ் குடுத்ததற்கான ஆதாரமிருந்தால் கொஞ்சமே முயற்சித்தால் பணம் கிடைக்கும். இல்லாவிட்டால் கஷ்டமே

மருதன் said...

ILA(@)இளா : அட்வான்ஸ் கொடுத்ததற்கான ஆதாரம் இருக்கிறது. அதை வைத்துதான் கேட்டுப் பார்க்கவேண்டும்.

மருதன் said...

Aandroan : வாங்கும் ஊதியத்துக்கு ஏற்ப வேலை செய்யாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமயம் வரும்போது அது பற்றியும் விவாதிக்கலாம்.

Unknown said...

மருதன்... முன்பணம் வாங்கி வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி தவறில்லை. கவனக்குறைபாட்டால் ஏற்பட்ட இழப்பை காரணம் காட்டி ஊழியரை வேலை நீக்கம் செய்ய மட்டுமே நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது. வேறு நிர்பந்தங்கள் செய்யவோ, சட்டத்திடம் கை காட்ட முடியாது. முன் பணத்தை திரும்ப பெறலாம்.

Anonymous said...

வாட்ச் வாங்க போனேன்.
வாட்ச் விற்றவர் வாய் துர்நாற்றம் அடித்தது. என் வாயிலும் அப்படித்தான் மாலை ஆனால் நாறும் என்று யூகித்தேன். ஆனாலும் முகர்ந்து பார்த்தால் என் நாற்றத்தை என்னாலேயே உணர முடியவில்லை. ஆனால் என் வாய் துர்நாற்றத்தை என் சித்தியின் குட்டி பையனால் உணர முடிகின்றது.

நான் கெட்ட வார்த்தை பேசுகின்றவன். நான் பேசும் போது அது தவறாக படவில்லை. அதே வார்த்தையை ஒரு புரோட்டா கடைக்காரர் வேறு ஒருவரை பேசிய போது அருவருப்பாக இருந்தது. என்னிடம் இருக்கும் ஒன்று எனக்கே பிடிக்காததாக இருந்து அது எனக்கே தெரியாமல் வெறு இருந்திருக்கின்றது. என்னிடம் என்ன பிடிக்கவில்லை என அறிய அதே ஒன்று அடுத்டஹ்வனிடம் இருந்து அதை நான் வெளியில் இருந்து கவனிக்க வெண்டி உள்ளது.

கிருஷ்ண பிரபுவிற்கு நன்றி.

என்னிடம் உள்ள கெட்ட வார்த்தை பேசும் பழக்கம் எனக்கே பிடிக்காத ஒன்று என்பதை எனக்கு உணர்த்தியதற்கு.

Venkat said...

பல அலுவலகங்களில் இப்படிப்பட்ட அக்ரிமெண்டுகளில் பலர் கையெழுத்து போட்டுள்ளனர். இது சட்டப்படி செல்லுபடியாகுமா?
Request some body with info to share