November 28, 2010

மாவோவும் மோடியும்

ஆதிவாசிகளின் 'நண்பர்' ராகுல் காந்தி, மோடியை மாவோவுடன் ஒப்பிட்டுள்ளார். மாவோவைப் போல் மோடி 'சில நன்மைகளையும் தீமைகளையும்' செய்திருப்பதாக ராகுல் அகமதாபாத் மாணவர்களிடம் சொல்லியிருக்கிறார்.

மோடியை உதாரணம் காட்ட சீனா வரை ராகுல் சென்றிருக்கவேண்டியதில்லை. பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி என்று தன் குடும்பத்தில் இருந்தே அவர் சிறந்த முன்மாதிரிகளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். உதாரணத்துக்கு, 1975 அவசர நிலைப் பிரகடனம், 1984 சீக்கியப் படுகொலைகள். அல்லது, 1987-90 இந்திய அமைதிப்படை செயல்பாடுகள். குடும்பத்து உதாரணங்கள் ஒருவேளை நினைவுக்கு வராமல் இருந்திருந்தால், கட்சிக்குள் தேடியிருக்கலாம். 2ஜி, போஃபர்ஸ், கல்மாடி என்று 'நன்மையும் தீமையும்' கலந்த பல வரலாற்று உதாரணங்கள் கிடைத்திருக்கும்.

விதர்பாவைச் சேர்ந்த ராமச்சந்திர ரவுட் என்னும் விவசாயி, தன் பிரச்னைகளை நூறு ரூபாய் பத்திரம் ஒன்று வாங்கி அதில் எழுதி, ராகுல் காந்தியின் கட்சிக்காரரும் இந்தியாவின் பிரதம மந்திரியுமான மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்தார். வெற்று காகிதம் என்று பிரதமர் நினைத்துவிடக்கூடாது என்பதால் இந்த நூறு ரூபாய் முதலீடு. எழுதி முடித்து தபாலில் அனுப்பிய பிறகே அவர் தற்கொலை செய்துகொண்டார். அந்தக் கடிதத்தை ராகுல் காந்தி ஒருமுறை வாசித்துப் பார்க்கலாம். விதர்பாவுக்கு ஒரு நடை சென்று வந்தால், மேலும் பல உதாரணங்கள் கிடைக்கும்.

மாவோவின் சீன வரலாற்றைத் கற்றுத் தேர்வதற்கு முன்னால், மன்மோகன் சிங் அரசின் தற்கால இந்திய வரலாற்றை ராகுல் ஒரு முறையேனும் புரட்டிவிடுவது நல்லது.

5 comments:

Anonymous said...

யாரும் எழுதவில்லையே என்று நினைத்தேன். எழுதி விட்டீர்கள் நன்றி

ஜோதி பிரகாசம்

Anonymous said...

good one

சுதிர் said...

மாவோவுடன் மோடியை ஒப்பிட்டது எந்த வகையிலும் நியாயம் இல்லை. ராகுல் க்ண்டிக்கப்பட வேண்டியவர்

விடுதலை said...

மோடியை உதாரணம் காட்ட சீனா வரை ராகுல் சென்றிருக்கவேண்டியதில்லை. பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி என்று தன் குடும்பத்தில் இருந்தே அவர் சிறந்த முன்மாதிரிகளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

Anonymous said...

//ஆனால் பஞ்சம் ஏற்பட்டு பல லட்சம் பேர் இறந்தார்கள் என்னும் கூற்று தவறானது. சீனர்களின் வேலை நேரம் அதிகரித்தது. உடலுழைப்பு அதிகரித்தது. அதே சமயம், அந்த உழைப்புக்கு ஏற்ற சத்தான உணவு அவர்களுக்கு கிடைக்கவில்லை. உணவுத் தட்டுப்பாடு பெருகியது.//

விவசாயத்தையும், விவசாயிகளையும் நாட்டின் முதுகெலும்பாக எண்ணி ஆண்ட மாவோ காலத்தில் விவசாயம் வளரவில்லையா? மேலும் வீழ்ச்சி அடைந்து பஞ்சம் ஏற்பட்டதா? அடடா..... அப்படியென்றால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதாக சொன்னதெல்லாம்???